வரவேற்கிறோம்
COVID-19 தொடர்ந்து வயது முதிர்ந்தவர்களுக்கும் நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகளுடன் வாழ்பவர்களுக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. நோயைத் தாமதமின்றி அடையாளம் காணுதல், நோயறிதல் செய்தல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவை நோயாளிகளின் சிகிச்சை விளைவுகளை கணிசமாக மேம்படுத்தும். இருப்பினும், ஆரம்பகட்டத் தலையீட்டிற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், தகுதியுடைய பல நோயாளிகள் இன்னும் அந்த வாய்ப்புகளைப் பெறத் தவறுகின்றனர்.
சுகாதாரத் துறையில் பணியாற்றும் பணிச்சுமை அதிகம் உள்ள சுகாதாரத் துறை நிபுணர்களை கருத்தில் கொண்டு, இந்த இலவச, சுயமாகத் திட்டமிட்டு கற்கக்கூடிய பயிற்சிப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. 10–15 நிமிடங்கள் கொண்ட ஐந்து குறுகிய தொகுதிகள் வழியாக, கடுமையான COVID-19 பாதிப்புக்கு ௨ள்ளாகியதால்அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்குப் பயன்படும் நடைமுறை மற்றும் ஆதார அடிப்படையிலான அணுகுமுறைகளை நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
மருத்துவ நிபுணர்கள், நடத்தை அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய சர்வதேசக் குழுவினால் உருவாக்கப்பட்ட இந்தப் பாடநெறி, தற்போதைய மருத்துவ ஆதாரங்களையும் நடத்தை அறிவியல் கருவிகளையும் ஒருங்கிணைத்து, பயனுள்ள தகவல்தொடர்பை மேம்படுத்தவும், சிகிச்சையைப் பெறுவதில் உள்ள தயக்கங்களை நிவர்த்தி செய்யவும், கலாசார ரீதியாகப் பொருத்தமான மற்றும் தனிநபர் மையப்படுத்தப்பட்ட பராமரிப்பை வழங்கவும் உதவுகிறது.
பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், கீழே உள்ள பொத்தானைப் பயன்படுத்தி சுருக்கமான பயிற்சிக்கு முந்தைய மதிப்பீட்டை (Pre-course Assessment) பூர்த்தி செய்யவும். ஐந்து பயிற்சித் தொகுதிகளையும் நிறைவு செய்த பின்னர், பாடநெறியை மதிப்பீடு செய்யவும், எதிர்காலப் பயிற்சிகளை மேம்படுத்தவும், பயிற்சி நிறைவு சான்றிதழை (Certificate of Completion) பதிவிறக்கம் செய்யவும் உதவும் வகையில் பயிற்சிக்குப் பிந்தைய மதிப்பீட்டை (Post-course Assessment) பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இரண்டு மதிப்பீடுகளையும் பூர்த்தி செய்ய சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
ஒவ்வொரு பயிற்சித் தொகுதியிலும் நடைமுறை உதாரணங்களும் பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்களும் இடம்பெற்றுள்ளன. இவை கற்றலை மேம்படுத்துவதோடு, மருத்துவ நடைமுறையில் அவற்றைச் செயல்படுத்துவதற்கும் உதவும்.
இந்தப் பயிற்சியை நான் ஏன் நிறைவு செய்ய வேண்டும்?
இந்தப் பாடநெறி, COVID-19-ஐத் தாண்டியும் பயன்படுத்தக்கூடிய நடைமுறைத் திறன்களை சுகாதாரத் துறை நிபுணர்களுக்கு வழங்குகிறது. எனவே, பல்வேறு நோய்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நோயாளிக் குழுக்களுக்கான பராமரிப்பிலும் இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1. ஆபத்து நிலை வகைப்படுத்தல் மற்றும் ஆரம்பகாலத் தலையீடு (Risk stratification and early intervention)
அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளை அடையாளம் காணுதல், சிகிச்சைக்கான தகுதியை மதிப்பிடுதல் மற்றும் சரியான நேரத்தில் தலையீடு செய்வதற்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள்.
இந்தத் திறன்கள் இன்ஃப்ளூயன்ஸா (Influenza), RSV போன்ற பிற தொற்றுநோய்களுக்கும், ஆரம்பகாலக் கண்டறிதல் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தக்கூடிய நீண்டகால சுகாதார நிலைகளுக்கும் ( chronic conditions) நேரடியாகப் பயன்படுத்தக்கூடியவை.
2. நடத்தை அறிவியலும் நோயாளிகளின் ஈடுபாடும் (Behavioural science and patient engagement)
நோயாளிகளின் தயக்கம், தவறான புரிதல்கள் அல்லது சிகிச்சையை முறையாகப் பின்பற்றாத நிலை போன்றவற்றை நிவர்த்தி செய்ய, நடத்தை மாற்ற உத்திகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
பல்வேறு கலாசார மற்றும் மொழிச் சூழல்களுக்கு ஏற்ற தகவல்தொடர்பு திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். இத்திறன்கள் அனைத்து வகையான மருத்துவச் சூழல்களிலும் பயனுள்ளதாக இருக்கும்.
3. மருத்துவத் தீர்மானம் மேற்கொள்ளும் கட்டமைப்புகள் (Clinical decision-making frameworks)
நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட சூழ்நிலைகளைப் பயன்படுத்தி ( case based scenarios), முறையான சிந்தனைத் திறனையும் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானம் மேற்கொள்ளும் திறனையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த அணுகுமுறைகளை ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் (Atrial Fibrillation), நீரிழிவு நோய் மற்றும் COPD தீவிரமடைதல் (COPD exacerbations) போன்ற பல்வேறு சுகாதார நிலைகளை நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தலாம்.
4. டிஜிட்டல் மற்றும் குறுங்கற்றல் அடிப்படையிலான பயிற்சி வழங்கல் (Digital and microlearning delivery)
இணையவழி நிகழ்வுச் சூழல்கள் (online case scenarios) மற்றும் நடைமுறைப் பயன்பாட்டுக் கருவிகளை உள்ளடக்கிய, தொகுதிவாரியாகவும் ( modular) சுயமாகத் திட்டமிட்டு கற்கக்கூடிய கற்றல் முறையிலும் (self-paced format) அமைக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி வடிவத்தை, பிற நோய்கள் தொடர்பான பயிற்சிகளுக்கும் தொழில்முறைத் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கும் ஏற்றவாறு மாற்றியமைத்துப் பயன்படுத்தலாம்.
5. மதிப்பீடு மற்றும் சுயசிந்தனைப் பயிற்சி (Evaluation and reflective practice)
பயிற்சிக்கு முந்தைய மற்றும் பிந்தைய மதிப்பீடுகள், உங்கள் கற்றலைச் சுயமாக மதிப்பாய்வு செய்வதற்கும் தொடர்ச்சியான கற்றலை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. இத்தகைய அணுகுமுறைகள் எந்தவொரு மருத்துவத் தலைப்பு அல்லது பயிற்சித் திட்டத்திற்கும் பயன்படுத்தக்கூடியவை.
தொகுதிகள்
அதிக ஆபத்து கொண்ட COVID-19 நோயாளிகள் கவனிக்கப்படாமல் விடப்படுகிறார்களா? மருத்துவ பயிற்சியில் ஆரம்பகட்ட அறிகுறிகள்அடையாளங்காணலை மேம்படுத்துதல்
பங்களிப்பாளர்கள்: ஆஸ்டின் சோகாங், யுனிவர்சிடாஸ் கிறிஸ்டன் கிரிடா வகானா, இந்தோனேசியா; டிரியானா கேசுமா தேவி, யுனிவர்சிடாஸ் ஏர்லாங்கா, இந்தோனேசியா; யுஹாங் ஜு, ஷான்டாங் இரண்டாவது மருத்துவ பல்கலைக்கழகம், சீனா; கில் டென் ஹூர், மாஸ்ட்ரிச்ட் பல்கலைக்கழகம், நெதர்லாந்து பல…
முன்கூட்டிய நடவடிக்கை, சிறந்த விளைவுகள்: அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளில் COVID-19 க்கான ஆரம்பகட்ட தலையீட்டின் முக்கியத்துவம்
இ்ரெம் பெர்னா குவென்ச் எர்டோன், துருக்கி மத்திய கிழக்கு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்; இகா பலாச்-போபோர்சிக் SWPS பல்கலைக்கழகம், போலந்து; ஒல்கா பெர்ஸ்கி, ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்; ஷேசன் திவாரி, சைஃபோல்க்ஸ் எஜுகேஷன், இந்தியா; பெல்கின் உனால், மிச்சிகன்…
நடத்தை மாற்றத்தின் மூலம் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளில் COVID-19 சிக்கல்களைத் தடுத்தல்
டேவிட் சைமன்ஸ், பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம்; அய்ஷெகுல் பகிர், ஹசெட்டெப்பே பல்கலைக்கழகம், துருக்கி; யோஹன்னா நூர்மி, ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்து பொதுவாக, COVID-19 கடந்தகாலத்தில் நடந்த ஒன்றாகவும், வெறும் சுவாசத் தொற்றுநோயாகவும் மட்டுமே…
COVID-19 ஐத் தாண்டிய வாழ்க்கை: நீண்டகால உடல்நல பாதிப்புகளை நிர்வகித்தல்
பங்களிப்பாளர்கள்: டொமினிகா க்வாஸ்னிக்கா, மெல்போர்ன் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா மற்றும் ரிஸ்மினா ரில்வான், சுயாதீன ஆய்வாளர், இலங்கை COVID-19 இன் தீவிர பாதிப்புக்குப் பின்: நாம் இன்னும் கற்றுக்கொண்டுவரும் அம்சங்கள் COVID-19 இன் தீவிர (acute) கட்டமே உலகளாவிய கவனத்தின்…
அதிக ஆபத்து கொண்ட குழுக்களில் COVID-19 நோயறிதல் மற்றும் சிகிச்சையை ஆதரிக்க நடத்தை அறிவியலை பயன்படுத்துதல்
பங்களிப்பாளர்கள்: ட்ரேசி எப்டன், மான்செஸ்டர் பல்கலைக்கழகம், இங்கிலாந்து, லிசா மேரி வார்னர், MSB மருத்துவப் பள்ளி பெர்லின், ஜெர்மனி, அலெக்ஸாண்ட்ரா லாசிக், சுயாதீன ஆய்வாளர், பெல்கிரேட், செர்பியா COVID-19 தொடர்பாக அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளுடன் பணிபுரிவது, ஒரே நேரத்தில்…